Titulo de articulo: Child Labor | Fecha de creacion: 01/27/2016 | Ultima actualizacion: 01/27/2016 | Idioma: Tamil | Categoria: Translation | Rango de TranslatorPub.Com: 0 | Vistas: 3165 | Comentarios: 0 | Valoracion: 0, Puntaje promedio: 0 (10 Max)
| Texto:
குழந்தை உழைப்பு என்ற சிறுவர்களால் செய்யப்படும் தொழில்களிலிருந்து அவர்களை மீட்பது எப்படி Naeem Syed
தொழில்துறைகளில் சம்பந்தப்பட்ட வளர்ச்சியடைந்த நாடுகள், வளரும் நாடுகளின் தொழில் வனப்பை எதிர்த்து பழி சுமத்தி, குற்றம் சாட்ட கருவியாக பயன்படுத்திக்கொள்ளும் ஓர் உத்தி தான் குழந்தை தொழிலாளர் அல்லது குழந்தை உழைப்பு என்ற சிறுவர்களால் செய்யப்படும் தொழில்கள். அத்தொழில்களை முடக்கிவிட்டால், சில அண்டை நாடுகள், அப்பொருள்களை உற்பத்தி செய்து அங்கிருந்து மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அவர்களுக்கு போட்டி குறைந்துவிடும், என்ற கணிப்பு. அப்படிப்பட்ட தீங்கை விளைவித்திடக்கூடிய கருத்துரையை வழங்குபவர்கள், ஒரு உறுதியான தீர்வு இல்லாமலும், பரிந்துரைகளுடன் வரும் ஒரு சிலர் அப்பரிந்துரைகளை செயலாக்கும் முடியாமையை அறியாதவராகவும் உள்ளனர். இதற்குக்காரணம், வளரும் நாடுகளின் தொழில் அமைப்பைப்பற்றி அவர்களின் அறியாமை அல்லது அந்நாடுகளின் ஏழ்மை அல்லது வறுமையின் கோடுகள் எப்பொழுதும் போல் இன்றும் பிரகாசமாக ஒளிர்ந்துகொண்டு கதிர் வீசுவதை பாராதவர் களாகளாக இருப்பது தான்.
அவர்களின் தாக்குதலுக்கு இலக்காகும் நாடுகள் முக்கியமாக, இந்தியா, பாகிஸ்தான், பங்லாதேஷ், நேபால், இலங்கை, மேலும் ஆப்பிரிக்க நாடுகளான லிபெரியா, க்ஹானா, நைஜீரியா, காமரூன் மற்றும் ஐவொரிகோஸ்ட், ஆகியவைகள். இந்த நாடுகள் வளர்ந்த நாடுகளுக்கு தேவையான பொருள்களை தத்தம் நாடுகளின் உற்பத்தி செய்து அவைகளை ஏற்றுமதி செய்கின்றன.
தன் தொழிற்சாலைகளின் பல் சக்கரங்களை சுழல வைத்து பொருன்களை உற்பத்தி செய்ய சிறுவர் உழைப்பை பெருமளவில் பயன்படுத்தும் இந்த நாடுகளின் தொழிற்சாலைகளை அலசுவோம், வாருங்கள். அதற்கு முன் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த வளரும் நாடுகள், ஒரு சிறுவனை வேலைக்கு அமர்த்த பல தரப்பட்ட வயது வரம்புகளை தொழிற்சாலைகளுக்கு பரிந்துரைத்துள்ளன. அதற்கு அடிபணிந்து, அந்நாடுகளின் சிறிய, நடுத்தர, பெரிய தொழிற்சாலைகள் 14 முதல் 18 வயதிற்கு கீழ்பட்டவர்களை வேலைக்கு அமர்த்திக்கொள்வதில்லை. விதிக்கப்பட்ட வயது வரம்பு பூர்த்தி ஆகாதவரை, நேரிடையாகவோ அல்லது ஒப்பந்த நிறுவனங்களின் மூலமாகவோ வேலை செய்ய அனுமதிப்பதில்லை. ஆனால் அநேகமாக, பதிவு பெறாத தொழிற்சாலைகள், குடிசைத்தொழில் கொண்ட நிறுவனங்கள், ரப்பர் பயிரிடப்படும் பெருந்தோட்டங்கள், காப்பி, தேயிலை தோட்டங்கள், விளையாட்டு பொருள்களை உண்டாக்கும் தொழிற்சாலைகள், பரிசுப்பொருள்கள், பனியன், பின்னப்படும் ஆடைகள், ரெடிமேட் ஆடை தொழிற்சாலைகள், சிற்றுண்டி சாலைகள், ஹோட்டல், மோட்டல்கள், பலசரக்கு கடைகள், காய்கறி மற்றும் பழ மண்டிகள், கடைகள் கூவி விற்போர், செய்தித்தாள், பத்திரிகை விநியோகஸ்தர்கள், சாலை ஓரம் கடை வைத்திருப்போர், இரும்பு கொல்லர், பொற்கொல்லர், பால் விநியோகஸ்தர், இரண்டு, மூன்று, நான்கு சக்கர வண்டிகளை பழுது பார்க்கும் மெகானிக் ஒர்க் ஷாப் கடைகள், பீடி தயாரிப்போர், அச்சுத்தொழில் செய்வோர், அட்டைப்பெட்டிகள், பிலாஸ்டிக் சம்பந்தப்பட்ட பொருள்கள் தயாரிப்போர், மறு பயன்பாட்டிற்கு தேவையான பிலாஸ்டிக் மீள் சுழற்சி (recycle), தையல் மற்றும் எம்ப்ராய்டரி கடைகள், ஜரி வேலைப்பாடு செய்யும் தொழில்கள், நெசவுத்தொழில், பாத்திரங்கள் செய்யும் தொழிற்சாலைகள், தீக்குச்சி, தீப்பெட்டி, மத்தாப்பு, பட்டாசு கம்பெனிகள், இன்னும் மேலும் பல தொழிற்சாலைகள், மலிவு விலை மிட்டாய் செய்யும் தொழிற்சாலைகள் ஆகியவை சிறுவர் செய்யும் தொழிலுக்கும், அவர்களின் உழைப்பிற்கும் பொறுப்பாளிகளாவர். மேற் சொன்ன தொழில்களில் அநேகமானவற்றில் தந்தையே தன் பிள்ளைகளை வேலைக்கு அமர்த்திக்கொள்வர். அவர் தன் பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவாரேயானால், சமுதாயத்தின் மற்ற பிள்ளைகளை அவரிடத்தில் வேலைக்கு சேர்த்துக்கொள்வர். அப்படிப்பட்ட பிள்ளைகளின் பெற்றோருக்கு தன் சொந்த தொழில் இருக்காது அல்லது அவர்களுடைய சொற்ப சம்பாத்தியம், பிள்ளைகளை படிக்க அநேக தொழில்களின் தன்மை எப்படிப்பட்டதென்றால், அதை பிள்ளைப்பருவத்திலிருந்தே பழிகினால் தான் வரும். அப்பொழுதுதான் அந்த தொழிலில் தலை சிறந்து விளங்கி, நேர்த்தியுடன் கூடிய நுணுக்கமான பொருட்களை உண்டாக்க இயலும். நிறைய கைத்தொழில்கள், ஒருவர் வளர்ந்தபின் கற்க இயலாது. ஒருவர் தனது 20 வயதில் ஒரு வேலையை கற்க ஆரம்பித்தால், அதில் நேர்த்தியடைய அவருடைய வாழ் நாளே கழிந்து விடும். மேலும் ஒருவர் தன் பள்ளிப்படிப்பை அல்லது கல்லூரி படிப்பை முடித்து பட்டம் பெற்ற பின்னர், இந்த சிறிய வேலைகளை செய்ய தயங்குவார். இவ்வேலைகள், தன் படிப்பிற்கும் அந்தஸ்துக்கும் பொருத்தமற்றதாகவும் மாறாகவும் எண்ணி, இவ்வேலைகளால் தன் கடுமையான முயற்சிக்குப்பின்பும், பொன்னோ, பொருளோ, பெயரோ, புகழோ கிடைக்கப்போவதில்லை என்ற தீர்மானத்திற்கு வந்து விடுவார். அதைவிட ஓர் அலுவலகத்தில் வேலை செய்யவே விரும்புவார்.
அநேக தொழில் நுட்ப வினைஞர்கள் பரந்த மனப்பான்மையற்று, அவருடைய தொழில் நுட்பங்களை தன் சந்ததியரைத்தவிர வேறு யாருக்கும் சொல்லித்தரப்போவதில்லை. உதாரணத்திற்கு, சிறந்த நேர்த்தியான கலைப்பொருட்களை உண்டாக்குவோர் தன் குழந்தைகளைத்தவிர மற்றவர் அந்த தொழில் நுட்பத்தை அறிந்துகொள்வதை விரும்புவதில்லை, ஆயூர்வேத நாட்டுபுறத்து மருத்துவர், ஹகீம்கள், வீட்டிலேயே நாட்டு மருந்து தாரிப்போர் ஆகியோர் தன் தொழில் இரகசியத்தை தன் சொந்த பிள்ளைகளைத்தவிர, வேறு யாருக்கும் புகட்டுவதில்லை.
சிற்பக்கலை, உலோகத்தின் மீது செதுக்கப்படும் கலை பொருட்கள், அணிகலன்களின் வேலைப்பாடு, தச்சு வேலை, மரத்தை செதுக்கி செய்யப்படும் வேலைப்பாடுகள், மட்பாண்டங்கள், குயவர் தொழில் நுட்பங்கள் ஆகியவை சிறு வயதிலிருந்து கற்றால் தான் அதில் தலை சிறந்து விளங்கி, சாதனைப்பொருட்களை உண்டாக்க இயலும்.
ஓவியம் வரைதல், செதுக்கல், வடித்தல், வடிவமைத்தல் ஆகிய திறமைகளும், தபேலா, புல்லாங்குழல், வயலின், ஹார்மோனியம், வீணை, கிதார் ஆகியவைகளை வாசிக்கும் திறமையும், இன்னிசை, பாட்டு பயிற்சி பலவித நடனங்கள் ஆகியவைகள் பிள்ளைப்பருவத்திலிருந்தே பழிகினால் தான் வரும். இவைகளை தன் வாழ்வில் பின் பகுதியில் ஆரம்பிப்போர், பின் தங்கியே இருப்பர். இன்னிசை நடனங்களிலும், நாடகங்களிலும், விளம்பரங்களிலும் பங்குகொள்ளும் சிறு வயதினர், சிறுவர் உழைப்பிற்கு உதாரணமில்லையா? அவர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதில்லையா ?
உலக கண்ணோட்டத்தில் சிறு வயதினர் உழைப்பு: இறக்குமதி செய்யும் நாடுகள் பொருட்களை கூடுமானவரை குறைந்த விலையில் வாங்க விரும்புவதால், அப்பொருள்களை ஏற்றுமதி செய்யும் நாடுகள், போட்டியின் காரணமாக தன் உற்பத்தி விலையை கட்டுப்படுத்த பல உத்திகளை கையாளுகின்றனர். அதில் ஒன்று சிறுவர்களுக்கு வேலையளித்து, உற்பத்தி விலையை குறைப்பதாகும். ஏற்றுமதி நிருவனங்களின் தயாரிப்புகளான பழமைகாலத்து பொருள்களாக காட்சி தரும் அழகு அலங்கார பொருட்கள், கைவினைப்பொருள்கள், பரிசுப்பொருள்கள், ஆடம்பர பொருட்களான மட்பாண்ட கலைப்பொருட்கள், பல மூலப்பொருட்களால் செய்யப்பட்ட பூஞ்சாடிகள், களிமண்பாண்டங்கள், செதுக்கப்பட்ட, கல், மர, உலோக அலங்கார பொருட்கள், தரை விரிப்புகள், மூங்கில், பிரம்பினால் செய்யப்பட்ட மரப்பொருள்கள், அத்துடன் கூடிய மற்ற பொருள்கள், சாக்லேட், மிட்டாய் செய்யும் சிறு தொழிற்சாலைகள் ஆகியவை தன் பாரம்பரிய தொழில்களை தக்க வைத்துக்கொள்ள, செயற்கைக்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சிறுவர்களை வேலைக்கு அமர்த்திக்கொள்கின்றனர். இங்கே, உற்பத்தி விலையை கட்டுப்படுத்த, வேலையாட்களுக்கு குறைந்த ஊதியம் அளிக்க வேண்டியதிருப்பதால், கடைசியில் இவைகள் சிறுவர் தொழில்களாக மாறிவிடுகின்றன. அநேக நாடுகளில் சிறுவர் உழைப்பிற்கு வித்திடும் மூலாதாரங்களையும், சூழ்நிலைகளை இப்பொழுது பார்ப்போம்:
கல்வியற்றோர், அன்றாட வாழ்விற்குபோராடுவோர், தினசரி உழைப்பாளிகள், போதாத வருமானத்துடன் அதிக நபர் கொண்ட பெரிய குடும்பங்கள், சிலர், பிள்ளைகளை தானே சம்பாதித்து தன்னை பாதுகாத்துக்கொள்ள குழந்தைகளை மற்றவரிடம் அற்பணிப்போர், தலைமுறை தலைமுறையாக கல்வியற்று, அடிமைகளாக நிலக்கிழார்களிடம் தஞ்சம் புகுந்தோர், இங்கே, முழு குடும்பத்துடன் அடகு வைக்கப்பட்டோர், ஆகியவர்கள்.
பாரம்பரிய பிச்சைக்கார கும்பல் கூட சிறுவர் தொழிலுக்கு உண்டான மேலும் ஒரு மூலாதாரமாகும். இறைவன் பெயரில் நாட்டில் அளிக்கப்படும் இலவச அன்ன தானத்திற்கு நன்றி! அவர்கள் தன் வியர்வையை சிந்தி, உழைத்து உண்ண இஷ்டம் இல்லாத ஜன்மங்கள், தன்னுடன், தன் குழந்தைகளையும் பிச்சை எடுக்க பழக்கி விடுவர். சிற் சில சமயங்களில், அவர் பிள்ளைகள், தனக்கு தேவையான அளவு உணவு, ஆடைகள் கிடைக்காததால் பிச்சை எடுக்க மறுத்து வேலை தேடி அலைவதுண்டு.
கைவிடப்பட்ட தெருவில் அலையும் சிறுவ சிறுமிகள். நெறிகெட்ட வழிகளில் பிறந்ததால், சமுதாயத்தின் சீற்றத்திற்கு பயந்தும், வறுமையின் காரணமாகவும், சொந்த பெற்றெடுத்த குழைந்தைகளை, அனாதையாக வேறு எங்கோ விட்டு விடுவது. பெற்றோர் இறந்துவிட்ட காரணத்தினாலும், உறவினர் உதவியும், அரவணைப்பும் கிட்டாததால், அனாதையாக அலையும் குழந்தைகளும், சாராயத்திற்கு அடிமையாகி, எந்நேரமும் தமக்குள் சண்டையிட்டுக்கொள்ளும் பெற்றோரின் பிள்ளைகள். இவர்களனைவரும் தான் சிறுவர் உழைப்பிற்கு வித்திடும் மூலாதாரங்களாவர்.
அவர்கள் அத்தனை பேரிலும் , மிகவும் துரதிர்ஷ்டமானவராக இருந்து, மிகவும் பாதிக்கப்பட்டவர்களாகவும் படுமோசமான நிலையிலிருப்போரும் சிறுவர்களைவிட சிறுமிகள் தான் அதிகம். அவர்கள் ஒரு குடும்ப சூழ் நிலையில் வேலைக்கு அமர்த்தப்பட்டாலும், நான்கு சுவர்களுக்கிடையில் மாட்டிக்கொண்ட அந்த அப்பாவி மக்கள் தன் எஜமானியம்மாவின் கொடுமைகளுக்கு ஆளாகி, சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாக்கப்படுகின்றனர். உதவியற்ற, தகுதியற்ற, மகிழ்ச்சியற்ற இந்த சிறுமிகளை, அடிமையைவிட மோசமாக நடத்தி, இரவென்றும், பகலென்றும் பாராமல், அவர்களிடம் வீட்டு வேலையை பணிக்கின்றனர். வாயிருந்தும் மௌனமான இந்த ஜன்மங்கள், எல்லாவித கொடுமைகள், அடி, உதை, திட்டு, பூப்போன்ற கன்னங்களில் விரல்கள் பதியும் அறை, பொன்னான உடல்களில் தீயினால் சுடுவது, போன்ற கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். நிரூபிக்கப்பட்ட சிறந்த குழந்தை பராமரிப்பாளரான இவர்கள், குறைச்சலாக ஈடு செய்யப்பட்டு, கிழிந்த பழைய ஆடைகளை உடுத்தி, உடல் நிலை பாதிக்கும் பொழுது புறகணிக்கப்பட்டு, பகலின் அனைத்து நேரமும், அர்த்த ராத்திரியில், எந்த நிமிடமும் வேலை செய்ய பணிக்கப்படுகின்றனர்.
இப்பொழுது கேள்வி என்னவென்றால், சிறுவர் உழைப்பை இரவோடு இரவாக இந்த பூமியிலிருந்து களையெடுக்க முடியுமா? முடியாது. தெரிந்தோ தெரியாமலோ, வளரும் நாடுகளின் சமூகங்களிலும், சமுதாயங்களிலும் வேரூன்றியுள்ள இந்த சிறுவர் உழைப்பு பிரச்சினையை ஒரு காலும் தீர்க்க முடியாது. சிறு பிள்ளைகள் பள்ளிக்கூடங்களில் படித்துக்கொண்டு, தன் கல்வி செலவுகளுக்காக பள்ளி விடுமுறை நாட்களில் வேலை செய்து சம்பாதிப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவர்கள் தன் பள்ளிக்கூட படிப்புக்கட்டணத்திற்கும், சீருடை, பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் வாங்குவதற்கும் சம்பாதிக்கின்றனர். சிலர் தன் கைச்செலவுக்காக சம்பாதித்து, பெற்றோரிடம் பணம் கேட்டு அவர்களை தொந்தரவு செய்யாமலும், வீண் செலவு செய்து, கெட்டுப்போகாமலும் இருக்கின்றனர். ஒரு சில சிறுவர்கள், தான் படிக்காமல் வேலைக்கு அமர்ந்து, தன் பெற்றோருக்கு பண சம்பந்தப்பட்ட விஷயங்களில் உறுதுணையாக இருந்து, தன் மற்ற சகோதர சகோதரிகளை பரிபாலித்து, அவர்களை ஆசையோடு பள்ளிகூடத்திற்கு அனுப்பி வைக்கின்றனர். அப்படிப்பட்ட சிறுவர்களை, பலவந்தமாக வேலையிலிருந்து நிறுத்தி விட்டால், குடும்பத்திலுள்ள அனைவரும் பண பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு, யாருடைய கல்வியும் பூர்த்தியாகாமல் போய்விடும். மேலும் படிப்பில் ஆர்வமற்ற சிறுவன், படிக்கவே மாட்டான். இன்னும் சொல்லப்போனால், கண்ணுக்குத்தெரிந்த தொழிற்சாலைகளிலிருந்து சிறுவர்களை நிறுத்திவிட்டால், அவர்கள், மறைந்திருந்து, மிகவும் மோசமான நிலைகளில் இன்னும் கடினமான வேலைகளை செய்யவும் ஒப்புக்கொள்ளக்கூடும். கல் உடைப்பு, கூலி வேலைகள், குப்பை பொறுக்கும் வேலை ஆகியவைகளுடன், சிறுவர்களை கெட்ட வழி நடத்தும் அயோக்கிய கும்பல்களில் சிக்கிவிடும் அபாயமும் உள்ளது. இதை ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) உடைய ஒரு ஆய்வு உறுதிப்படுத்துகிறது. கல்வியை கட்டாயம் ஆக்குவது ஒரு தீர்வு ஆகாது. ஏனெனில், கல்வி எல்லா நிலைகளிலும், அனைத்து பட்டணங்களிலும் இலவசம் கிடையாது. முழுக்கல்வியை இலவசம் ஆக்கினாலும், வெறும் வயிற்றில் பிள்ளைகள் பள்ளிக்குச்செல்வர் என நாம் எதிர்பார்க்க முடியாது. அத்துடன், சரியான சீருடை இல்லாமலும், பாட புத்தகங்கள் இல்லாமலும் அவர்களை படிக்க வைக்க முடியாது. வேலை செய்து தன் பெற்றோருக்கு துணைபுரியும் குழந்தைகளை அவர் நன்மைக்கென சொல்லி பெற்றோரிடமிருந்து பிள்ளைகளை பிரித்து, தொலை தூரத்தில் பிள்ளைகளை படிக்க வைத்தாலும் அந்த பிள்ளைகள் பெற்றோரை பிரிந்து ஒரு நாளும் மற்ற சூழ் நிலைகளில் மகிழ்ச்சியாக இருக்காது.
தற்சமயத்திற்கு எனக்குத்தெரிந்த தீர்வானது, பெற்றோர் தன் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப ஊக்குவிக்கப்படுவதுடன், பள்ளிகள் சிறிது அதிகபட்ச ஆர்வத்துடன், ஒரு படி மேல் உயர்ந்து, பணம் படைத்த மற்ற குழந்தைகளின் பெற்றோரை அணுகி, ஏழை பிள்ளைகளின் பள்ளி, சீருடை, பாட புத்தக செலவுகளை கூடுமானவரை பங்கிட்டுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு கிராம, ஊர், கார்பொரேஷன், தன் வார்டுகளுடன் செயல்பட்டு, ஏழை பெற்றோரை அணுகி அவர் பிள்ளைகளுக்குத்தேவையான கல்வி உபகரணங்களை அளித்து, பிள்ளைகளுக்கு படிக்கும் ஆர்வத்தை உண்டாக்க வேண்டும். சமூக சேவை புரிவோர்களால் சமூக கிளப்ஸ், நிறுவனங்கள், அணுகப்பட்டு, அந்தந்த பகுதிகளின் பிள்ளைகளின் ஆதரவாளராக செயல்பட முன் வரவேண்டும். முனிசிபல் அலுவலர், அரசாங்க அலுவலர் நியமிக்கப்பட்டு, தொழிற்சாலைகளில் வேலை செய்யும் சிறுவர்களின் நலனை கருதி, அவர்களை வேலையிலிருந்து நிறுத்துவதைவிட வேலை முடிந்ததும் அவர்களை படிக்க வைக்கும் பொறுப்பை தொழிற்சாலை நிறுவனத்தின் மேலாண்மை அல்லது முதலாளி ஏற்றுக்கொள்ளும்படி செய்ய வேண்டும்.
மேற் சொன்ன முயற்சிகளை ஒருங்கிணைத்து செயல்பட்டால், அடுத்த நூற்றாண்டிலாவது, சிறுவரின் பெரும் பகுதி, சமுதாயத்தில் தனக்கு தேவையான இடத்தை பிடிக்கும்.
|
|